மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (13:49 IST)
தமிழகத்தில் நீண்ட காலம் கழித்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “மாணவர்கள் பல மாதங்கள் கழித்து பள்ளிகளுக்கு வருகை புரிய உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் நீண்ட காலமாக வீடுகளிலேயே இருந்ததால் கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க ரூ.200 கோடி செலவில் வாசிப்பு இயக்க தொடங்கப்படவுள்ளது” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்