திமுக வந்த 100 நாளில் ஊழல் பெருகிவிட்டது! – ஆளுனரை சந்தித்த பின் எடப்பாடியார் பேட்டி!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:24 IST)
கொடநாடு வழக்கு விவகாரம் குறித்து இன்று ஆளுனரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக திட்டமிட்டு குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று சட்டமன்ற விவாதத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மறுவிசாரணை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் இன்று ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது திமுக வழக்கு தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஆளுனர் சந்திப்புக்கு பின் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “கொடநாடு வழக்கில் திட்டமிட்டு என் பெயரை தொடர்புபடுத்த முயற்சிக்கிறார்கள். கொரோனா இறப்பு எண்ணிக்கையை திமுக மறைக்கிறது. கொரோனா மூன்றால் அலை பரவல் குறித்து திமுக கவலைப்படவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவினர் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது. திமுக 100 நாள் சாதனை என கூறி வருகிறது. இந்த 100 நாட்களில் ஊழல்கள் அதிகரித்துவிட்டது. மக்களுக்கு சோதனையும், வேதனையுமே எஞ்சியுள்ளது” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்