கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல்

வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:44 IST)
கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது ’கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என்றும் கூட்டுறவுத்துறை சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிறது என்றும் மக்களுக்கு செய்யும் சேவையாக கூட்டுறவுத்துறை மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
தற்போதைய கூட்டுறவு துறையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் ரேஷன் கடை அரிசிகள் கடத்துவது அதிகரிப்பதாக பல செய்திகள் வருகிறது என்றும் அதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்க விட்டால் பல பிழைகள் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் நடமாடும் ரேஷன் கடைகள் உரிய நேரத்துக்கு செல்வதில்லை என புகார்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையின் செயல்பாடு தனக்கு திருப்தி இல்லை என நிதி அமைச்சர் பேட்டி பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்