திமுக கூட்டங்களுக்கு பிரச்சினை செய்யும் திமுகவினர்? – பிடிஆர் வேதனை!

வியாழன், 13 அக்டோபர் 2022 (14:05 IST)
கடந்த சில நாட்களாக திமுக கட்சியினர் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பல்வேறு நிகழ்வுகளில் வெவ்வேறு திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசிய வீடியோக்கள் சில வெளியாகி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.

ALSO READ: ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே மிகுந்த வருத்தத்துடன் பேசியதும் வைரலானது. இந்நிலையில் திமுகவிலேயே கட்சியின் மீது சிலர் அதிருப்தியுடன் சில வேலைகளை செய்து வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.



இதுகுறித்து சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் “திமுகவில் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருவதாக உள்ளது. கடந்த சில நாட்களாக சிலர் கட்சி நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பதுடன், மற்றவர்களையும் அழைத்து கட்சி கூட்டங்களை புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் வந்துள்ளது” என கூறியுள்ளார்.

இதனால் கட்சிக்குள் சிலர் தனி கோஷ்டியாக மாறும் அபாயம் இருப்பதால் கட்சி தலைமை இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும் என திமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்