ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கலாம்: அமைச்சர் பொன்முடி

வியாழன், 1 ஜூலை 2021 (14:17 IST)
ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கைக்காக கல்லூரிகள் திறக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என்று பேட்டி சற்றுமுன் பேட்டியளித்தபோது, ‘ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அதன் காரணமாக கல்லூரிகளை திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை ஆன்லைன் வகுப்புகள் தான் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் மிக விரைவில் வந்துவிடும் என்பதால் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்