மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்!

J.Durai

சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:21 IST)
மதுரை மாவட்டம் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், வழங்கினார்.
 
மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள திரு.வி.க மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளியில்  பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற விழாவில்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன்,193 மாணவ மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், பள்ளிக் குழந்தைகளுக்கு,இலவச சீருடைகளையும் வழங்கினார்.
 
இது குறித்து பேசிய அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் ...... 
 
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமை
யிலான இந்த திராவிட மாடல் அரசு  கல்வி வளர்ச்சிக்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
குழந்தைகள் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச மிதிவண்டிகள் திட்டம்,கல்வி கற்பதற்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
 
நீதிக்கட்சி காலம் தொடங்கி கடந்த ஒரு நூறாண்டு காலமாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் தமிழ்நாடு மாநிலம் கல்வி வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும்,  சமத்துவத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்
களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
 
மதுரையில் திருப்பதி அப்பளம் நிறுவனத்தின உரிமையாளர்  ராஜேந்திரன், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக தன்னார்
வத்துடன்
பெரும் நிதியை தானமாக வழங்
கியுள்ளார்கள். அவரது இந்த செயலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 
 
சில மாதங்களுக்கு முன் விகடன் பத்திரிக்கை நிறுவனம் அவருக்கு விருது அளித்தது. அதை அளிப்பதற்கு என்னை அழைத்
திருந்தார்கள். சென்னையில் கலை
வாணரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 
கலந்து 
கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் அவரை பாராட்டி அந்த விருதை அளித்தேன்.
 
அதேபோல நானும் எங்கள் குடும்ப முன்னோர்களும் கல்வியின் அருமையை அறிந்து கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். எங்களது தாத்தா காலம் தொட்டு தற்போது வரை தொடர்ந்து மக்கள் பணியில் சேவையாற்றி வருகிறோம். இன்றைக்கு 193 மாணவ மாணவிகளுக்கு மிதி
வண்டகளும், 495 மாணவர்களுக்கு சீருடைகளும்  வழங்கப்
படுகிறது என்று  தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் ரகுபதி, மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி, மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி,சரவண புவனேஸ்வரி , மாநகராட்சி கல்விக்
குழுத் தலைவர் ரவிச்சந்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், மகாலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்