அமைச்சரின் உதவியாளர் கத்தி முனையில் கடத்தல்! – திருப்பூரில் பரபரப்பு
புதன், 23 செப்டம்பர் 2020 (13:44 IST)
தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை மர்ம கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Minister Udumalai Radhakrishnan
தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளராக பணியாற்றி வருபவர் கர்ணன். இன்று உடுமலைபேட்டை சட்டமன்ற கட்டிடத்தில் பணியில் இருந்த கர்ணனை, உள்ளே புகுந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி வெளியே கொண்டு சென்றுள்ளனர். பிறகு அங்கு தயாராய் நின்ற தங்கள் வாகனத்தில் அவரை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ணனை மர்ம கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கர்ணன் கடத்தப்பட்ட விவகாரம் தனிநபர் பிரச்சினையாக இருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.