அமைச்சர் மா. சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால், அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நில ஒதுக்கீடு சம்பந்தமான குற்றச்சாட்டு அமைச்சர் மா. சுப்பிரமணியனின் மீது உள்ளது. அவர் சென்னை மேயராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்கு நிலத்தை மாற்றியுள்ளார் என பார்த்திபன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர்மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கை ரத்து செய்யக்கோரி மா. சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் மே 23ஆம் நேரில் ஆஜராக அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆஜராக வேண்டும், ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி எச்சரித்தார். மே 23ஆம் தேதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.