போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சனி, 7 ஜனவரி 2023 (11:33 IST)
போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்கள் உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் முடிந்து விட்டதை அடுத்து தங்கள் பணியை நீட்டிக்க வேண்டும் என்று 2300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் போராட்டம் நடத்தும் செவிலியர்கள் உடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இன்று மாலை 3 மணிக்கு செவிலியர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்றும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பணியிலிருந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2300 செவிலியர்கள் மீண்டும் பணி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும் இது போராட்டம் நடத்தும் செவிலியர்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த பணி மூலம் செவிலியர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே பாதுகாப்பாக பணி செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அதை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்