மருத்துவ காப்பீட்டிற்கான ஜிஎஸ்டியை குறைக்க அல்லது ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் மதிப்புக்கூட்டு வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் பல்வேறு சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் எடுக்கும் மருத்துவம் மற்றும் ஆயுள் சார்ந்த காப்பீடு திட்டங்களுக்கும் ப்ரீமியம் தொகையில் ஜிஎஸ்டி கணக்கிடப்பட்டு வருகிறது.
மருத்துவ அவசரத்திற்காக மக்கள் கட்டும் இந்த காப்பீட்டு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக உள்ள நிலையில் அதை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை நிதி அமைச்சகம் பரிசீலித்த நிலையில் காப்பீட்டிற்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்கவோ அல்லது முற்றிலுமாக ரத்து செய்யவோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் ஜிஎஸ்டி வரி கட்டமைப்பில் செய்யப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையும் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K