எம்.எல்.ஏவுக்கு கடிதம் எழுதிய மாணவி விபத்தில் பலி: உறவினர்கள் போராட்டம்!

திங்கள், 2 ஜனவரி 2023 (19:53 IST)
தங்கள் பகுதிக்கு போக்குவரத்து வேண்டுமென எம்எல்ஏவுக்கு கடிதம் எழுதிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் பெலகாவி என்ற பகுதியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அந்த பகுதி எம்எல்ஏ கடிதம் எழுதினார்
 
இந்த கடிதம் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் போக்குவரத்து வசதி வேண்டி கடிதம் எழுதிய 14 நாட்களில் கடிதம் எழுதிய மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. வேகமாக வந்த கார் ஒன்று மாணவி மீது மோதியது என்றும் காரில் மோதிய அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மாணவி கடிதம் எழுதி உடன் சாலையை சரி செய்திருந்தால் மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் அரசின் அலட்சியம் தான் அவரது உயிரை பறித்து காரணம் என்றும் அந்த பகுதி மக்கள் கூறியதோடு அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்