தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் கோவில்பட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிருகிறார். இந்நிலையில் அதே கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக – அமமுக இடையே கோவில்பட்டியில் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கோவில்பட்டியில் அமமுகவினர் தோல்வி கண்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும், அதனால் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.