சிங்கம், புலி எல்லாத்தையும் பார்த்தவன்; நண்டு போராட்டத்திற்கு எதிராக பொங்கிய அமைச்சர்

வெள்ளி, 29 ஜூன் 2018 (15:37 IST)
அமைச்சர் ஜெயக்குமார் வீட்டு முன் பெண் ஒருவர் நண்டுகளை விட்டு நடட்திய போராட்டத்திற்கு சிங்கம், புலி, கரடி என எல்லாத்தையும் பார்த்தவன் என்று கூறியுள்ளார்.

 
நர்மதா நந்தகுமார் என்கிற பெண் இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார் வசிக்கும் சென்னை பட்டினப்பாக்கம் வீட்டின் அருகே நண்டுகளை எடுத்து கீழே விட்டார். அவரை போலீசர் கைது செய்தனர்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால், செய்தியாளர்களிடம் தினமும் பேசும் அமைச்சர் ஜெயக்குமார் பல திட்டங்களை கூறுகிறார். ஆனால், எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை. எனவே, அந்த திட்டங்களை வேகமாக செயல்படுத்தாவிடில், அடுத்து ஆமைகளை விட்டு போராட்டம் நடத்துவேன்” என கூறினார்.
 
இதற்கு பதலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்கள் மூலம் இது போன்று தகவல்களை பரப்பி விட்டு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். நண்டை கண்டு எந்த பயமும் கிடையாது. சிங்கம், புலி, கரடி என எல்லாத்தையும் பார்த்தவன். இதை யாரோ தூண்டி விடுகிறார்கள். 
 
பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் எம்.எல்.ஏ.க்களும் பார்வையிட்டோம். வீடுகளை இழந்த மீனவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்