காரமும் இல்லை, ரசமும் இல்லை... பிளவு சர்ச்சைகளுக்கு எண்ட் கர்ட் போட்ட ஜெயகுமார்!!

சனி, 19 செப்டம்பர் 2020 (14:01 IST)
அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தகவல். 
 
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போது ”ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நுழைந்த போது “நிரந்த முதல்வரே” என்றும் கோஷங்கள் எழுப்பட்டது.  
 
அப்போதே பிரச்சனை வரும் எதிர்பார்த்த நிலையில், அப்போது அல்லாமல் கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இணைப்பின்போது ஒப்புக்கொண்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கோரிய போது பிரச்சனை வெடித்தது என செய்திகள் வெளியானது. 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வரும், துணை முதல்வரும் ராமர் - லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர் எனவும் அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை. அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, காரசார விவாதம் நடைபெறவில்லை. கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்