ஸ்டாலின் ஒரு அரசியல் குழந்தை: நக்கலடிக்கும் ஜெயகுமார்!

சனி, 30 நவம்பர் 2019 (18:03 IST)
ஸ்டாலின் ஒரு அரசியல் குழந்தை என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 
 
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். அப்போது அவர் பேசியதாவது, திமுக, தலைவர் ஸ்டாலின், ஒன்றும் தெரியாத, சின்ன குழந்தைபோல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இன்னும் அவர் அரசியலில், பேபியாக உள்ளார். 
 
துணை முதல்வராக இருந்தவர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும், 60 வயதிற்கு மேல் குழந்தை என்பது போல குழந்தையாகி விட்டார் ஸ்டாலின். 
 
பல முறை, உள்ளாட்சி துறை அமைச்சரும், முதல்வரும், 'பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்' என, கூறி உள்ளனர். 
 
ஆனால், இவரை பொருத்தவரை, தேர்தல் நடக்கக் கூடாது. அதற்கு என்ன வழிகள் உள்ளதோ, அனைத்தையும் கையாளுகிறார். இடைத்தேர்தலில் இமாலய வெற்றியை, அதிமுக பெற்றதால், திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது இதனால் தான் ஸ்டாலின் இவ்வாறு இருக்கிறார் என நக்கலடித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்