தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் நடக்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வந்த திமுக மற்று கூட்டணி கட்சிகள் நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
அதை தொடர்ந்து திமுகவின் அழுத்தத்தினாலேயே அரசு தேர்வை ரத்து செய்ததாக சமூக வலைதளங்களில் திமுகவினர் # MKS சொல்கிறார் EPS செய்கிறார் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வு ரத்து குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “யாருடைய நிர்பந்தத்தினாலும் பொதுத்தேர்வை ரத்து செய்யவில்லை. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது” என கூறியுள்ளார்.