காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர் ”செல்போன் வந்ததிலிருந்து இளைஞர்கள் சீரழிந்து விட்டார்கள். செல்போன் கண்டுபிடித்தவன் கையில் கிடைத்தால் மிதிக்க வேண்டும். மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக அரசு மடிக்கணினி வழங்கப்படுகிறது. மாணவர்கள் அதை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
செல்போன் கண்டுபிடித்தவரை அமைச்சர் ஆவேசமாக பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர் கண்டுபிடித்தவரை உதைப்பதைவிட செல்போனை உடைப்பது மேலானது என கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.