நிர்மலா சீதாராமன் வந்த அதே நாளில் தூத்துக்குடியில் ரஜினிகாந்த்.. என்ன காரணம்?

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (12:49 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ள சேதத்தை பார்வையிட தூத்துக்குடி வந்திருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன்னர் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். அவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் பின்னர்  வெள்ளை சேதத்தை பார்வையிட உள்ளார். 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இன்று தூத்துக்குடி வந்திருக்கிறார். அவர் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தூத்துக்குடியில் நடைபெற இருப்பதை அடுத்து அவர் தூத்துக்குடி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்