வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 100% மின்சாரம் வழங்கப்பட்டது: மின்வாரிய தலைவர்

புதன், 27 டிசம்பர் 2023 (11:00 IST)
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 100% மின்சாரம் வழங்கப்பட்டது என மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு 100% மின்சாரம் வழங்கப்பட்டது/ மேலும் விவசாய பணிகளுக்கான மின்சாரம் மட்டும் நெல்லை, தூத்துக்குடியில் வழங்கப்படவில்லை. 
 
விளை நிலங்களில் நீர் தேங்கி இருப்பதால் மின்கம்பம் அமைக்க முடியாத நிலை உள்ளது. வரும் ஜனவரி முதல் வாரத்தில் விவசாய பணிகளுக்கான மின்சாரம் வழங்கும் பணிகள் தொடங்கும் என  மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் பல நாட்கள் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர். தற்போது மின்சார வாரியம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக மீண்டும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்