இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், எங்கள் கோரிக்கையை அமைச்சர்கள் தலைமைச் செயலாளர்கள் கால்நடை மருத்துவ அதிகாரிகள் ஏற்று கொள்வதாக உறுதி அளித்து உள்ளதால் எங்கள் போராட்டத்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் எங்கள் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும் அமைச்சர்கள் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். எங்களது அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக நாளை நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 9 அல்லது 10ஆம் தேதி எங்கள் சங்கத்தை கூட்டி முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்