அதாவது 0 – 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 -6கிமீ வரை, 6 முதல் 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 ஆகவும்,இருந்த நிலையில் தற்போது . 5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு சலுகையாக ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் இந்த கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் வருகிற பிப். 22 முதல் நடைமுறைக்கு கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.