சென்னையில் போக்குவரத்து சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பலர் இந்த சேவையை பயன்படுத்தி வந்தாலும் விடுமுறை நாட்களில் மெட்ரோவை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் காலை 8 மணிக்கு மெட்ரோ சேவை தொடங்குவதை மாற்றி 6 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் கருத்தை பரிசீலித்த மெட்ரோ நிர்வாகம் ஞாயிற்றுக் கிழமை மற்றும் மற்ற அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கே தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் மட்டும் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.