இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்த முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுந்துள்ளது, அதோடு கேட்டு ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால், ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.