சதமடிக்கும் ஏரியாக்கள்: கொரோனா மையமாக மாறும் சென்னை!!

சனி, 2 மே 2020 (12:09 IST)
சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தொற்று சதமடித்துள்ளது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 203 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.  
 
தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 641 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில், 558 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 87%. 
 
இந்நிலையில், சென்னையில் ராயபுரம், திரு,.வி,க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து தற்போது தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
 
ஆம், திரு.வி.க நகரில் 259 பேரும்,  ராயபுரத்தில் 216 பேரும்,  தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்