காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு இன்று முன்னுரிமை!
சனி, 8 ஜனவரி 2022 (08:52 IST)
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. தமிழ்நாட்டில் 50,000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.