இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அழகிரி “திமுகவில் மீண்டும் இணைய நான் விரும்புகிறேன். ஆனால், ஸ்டாலின் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். கட்சியில் இணைந்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்” எனக் கூறினார்.
இதற்கு முன்புவரை, திமுகவில் கருணாநிதி மட்டும்தான் தலைவர் என கூறிவந்த அழகிரி, தற்போது திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்க தான் தயாராக இருப்பதாக கூறியிருப்பது திமுகவில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.