திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக மதிமுகவிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது குறித்து மதிமுகவின் தலைவர் அர்ஜுனராஜ் கூறிய போது கூட்டணி குறித்து அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றும் நாங்கள் உதய சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் திமுக எவ்வளவு தான் நிர்பந்தம் செய்தாலும் அதற்கு மட்டும் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார்