மயிலாடுதுறை – சேலம் நேரடி ரயில் சேவை தொடக்கம் : பயணிகள் கொண்டாட்டம்!

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
மயிலாடுதுறை மற்றும் சேலம் இடையே  புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார். 
 
நீண்ட காலமாக மயிலாப்பூர் - சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
 
மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறை சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. 
 
இந்த ரயில் தினசரி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில்  கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக 1.45 மணிக்கு சேலம் செல்கிறது 
 
அதேபோல் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்