பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

Mahendran

செவ்வாய், 28 மே 2024 (16:36 IST)
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தினமும் ஏராளமான முருக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் மலை ஏறுவதற்கு ரோப் கார் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்தது. 
 
இந்த ரோப் கார் வசதியை பல பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வரும் 30-ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக தினமும் ஒரு மணி நேரம், மாதத்திற்கு ஒரு நாள் மற்றும் ஆண்டுக்கு ஒரு மாதம் நிறுத்தப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில் மாதத்துக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் மே 30ஆம் தேதி நிறுத்தப்படும் என்றும் அன்றைய தினம் மாதாந்திர பராமரி பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே மே 30ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என்றும் எனவே பக்தர்கள் மாற்று வழியை பயன்படுத்தி மலைக் கோயிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்