10 ரூபாய்க்கு லைட்டர் விற்பதா? நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்..!

Siva

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (16:05 IST)
பத்து ரூபாய்க்கு லைட்டர் விற்பதை கண்டித்து நாளை முதல் 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என்று தீப்பெட்டி ஆலையின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சிவகாசி மற்றும் மாதம் சுற்றுப்புறங்களில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் உள்ளன என்பதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த ஆலைகளின் மூலம் தான் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகாசியில் இருந்து தான் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளுக்கு தீப்பெட்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது லைட்டர் வரத்து அதிகம் காரணமாக தீப்பெட்டிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக தெரிகிறது.

இருபது ரூபாய்க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக சிலர் வாங்கி வந்து பத்து ரூபாய்க்கு லைட்டர் விற்கப்படுவதால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதனை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்