அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்! – மாஸ்க் அணிந்து பள்ளி செல்லும் மாணவர்கள்!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:32 IST)
திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் சில பள்ளிகளில் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



தமிழகத்தில் மழை காலம் தொடங்கிய நிலையில் சீசன் நோய்கள் தொற்று ஆங்காங்கே பரவி வருகிறது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் தொடர்பாக மத்திய அரசும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமீப காலமாக திண்டுக்கல் மாவட்டத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட சீசன் வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக திண்டுக்கலில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களை மாஸ்க் அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளதால் மாணவர்கள் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். வேறு சில மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீசன் வியாதிகளை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான அளவு மருந்துகளை கையிருப்பில் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்