தன்னார்வலராக வந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிய அதிகாரி! – சென்னை போலீஸ் விசாரணை!

புதன், 8 ஜூலை 2020 (15:03 IST)
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வலராக ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவி ஒருவரிடம் மாநகராட்சி உதவி பொறியாளர் ஆபாசமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தலைநகரமான சென்னையில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு வேகமாக அதிகரிக தொடங்கியது. கொரோனா பாதிப்புகள் தொடங்கிய காலத்திலேயே தன்னார்வலர்களும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு தன்னார்வலராக பணியாற்றி வந்த கல்லூரி பெண் ஒருவருக்கு மாநகராட்சி துணை பொறியாளர் கமலக்கண்ணன் என்பவர் போன் மூலம் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார் கமலக்கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்