அதன் பிறகு திடீரென ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது; என்று கூறப்பட்டுள்ளது.