இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.