கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ,
மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் கரிஷ்மா எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கரிஷ்மா நிகழ்வாக நடைபெற்ற இதில், ஓவியம்,புகைப்படம் எடுத்தல், பட கவிதை விளம்பரப் படப்பிடிப்பு வினாடி வினா, குழு மற்றும் தனி நடனம், இசைக்குழுக்களுக்கான போட்டி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.