தமிழகத்தில் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்ட மதுக்கடைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என மூட உத்தரவிடப்பட்டன. தமிழக அரசின் மேல் முறையீட்டின் காரணமாக மதுக்கடைகளை திறப்பதன் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். அதனால் இன்று முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.