கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். அதேபோல், அன்று மதுரையில் முதல் பொதுக்கூட்டத்தையும் கூட்டி, தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சாரில் நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து ரயில் மூலம் அவர் திருச்சி புறப்பட்டார். அப்போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.