தமிழகத்தை ஏமாற்றிய மத்திய அரசு; திமுக வின் சார்பில் அவசர செயற்குழு கூட்டம்

வெள்ளி, 30 மார்ச் 2018 (08:14 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக, திமுக செயல்  தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதற்கு 6 வாரம் கெடுவை விதித்தது. அந்த கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மத்திய அரசு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் தலைமையில்,  அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்