சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் ஸ்பீச் நடத்திய நிலையில் அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதும் இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் திடீரென விலகிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, இந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திடீரென அவரது வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.