தமிழகம் பக்கம் வராத மகா! – குறைந்தது மழை!

வெள்ளி, 1 நவம்பர் 2019 (13:27 IST)
அரபிக்கடலில் உருவான மகாப்புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் மழை வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. மகா என பெயர்சூட்டப்பட்ட இந்த புயல் தமிழகத்தின் தென் கோடி பகுதிகள் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பெருமளவு மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் திடீரென தனது பாதையை மாற்றி கொண்ட மகா தமிழகத்திலிருந்து விலகி எதிர்திசையில் நகர தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளது.

அதேசமயம் நவம்பர் 4ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்