நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவாகியிருக்கிறது. கட்சி துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டநிலையில் தவெக முதல் சட்டமன்ற தேர்தலை விரைவில் சந்திக்கவுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என கணிக்கப்படுகிறது..
ஒருபக்கம் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தவெகவினர் ஆக்டிவாக இருக்கிறார்கள்.. அவர்கள் விஜயின் புகழ் பாடி தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. அதேபோல் திமுக மீது கடுமையான விமர்சனங்களையும் வைக்கிறார்கள்.. அதில் பல விமர்சனங்களும், கருத்துக்களும் தரம் தாழ்ந்து இருக்கிறது.. பலரும் ஆபாசமாகவும் பதிவிடுகிறார்கள். அதேபோல் விஜயை யாராவது விமர்சித்தாலோ அவருக்கு எதிராக பேசினாலோ அவரை மிகவும் மோசமாகவும், இழிவாகவும் பேசி வீடியோ போடுகிறார்கள்.. கருத்துக்களை பதிவிடுகிறார்கள்..
வேலூர் மீட்டிங்கில் விஜய் பேசிய போது ஒரு குட்டி கதை சொன்னார்.. அதை நக்கலடித்து பிக்பாஸ் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டார்.., இதையடுத்து விஜய் ரசிகர்களும், விஜயால் விர்ச்சுவல் வாரியர்ஸ் என சொல்லப்படும் தவெகவினரும் சமூக வலைதளங்களில் ஜூலியை மிகவும் கடுமையாக விமர்சித்தார்கள்..
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.. சமூக வலைதள பக்கங்களில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கீழ்த்தரமான விமர்சனங்களை தவெக பேசுவதற்கு கண்டனம்.. இது போன்ற செயல்களில் ஈடுபடும் தாமரைக் கவுண்டர் மீது அக்கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.