வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து

திங்கள், 1 நவம்பர் 2021 (11:14 IST)
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது, ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
இதனை அடுத்து வன்னியர்களுக்கு இந்த ஆண்டு முதல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்