கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் பொதுவெளிகளில் நடமாடவும், கடைகள் திறக்கவும் அனுமதி அளித்திருந்தாலும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தியுள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பலர் முன்னெச்சரிக்கையின்றி மாஸ்க் அணியாமல் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை “கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தினால் என்ன?” என்று கூறியுள்ளது. மேலும் “மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றாதது போன்ற செயல்களுக்கு கைது நடவடிக்கை எடுத்தால் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.