அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த நீதிமன்றம்

வெள்ளி, 3 மார்ச் 2023 (17:07 IST)
திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதன் தெரிந்ததே. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பல கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனைத்து சாதியினரும் ஆகலாம் என்ற திட்டத்தில் ஸ்ரீரங்கம் குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரண்டு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த்  நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் ஆகம விதிக்கு எதிராக ஸ்ரீரங்கம் குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதாக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தெரிவித்தார்.,
 
மேலும் நீண்ட நாட்களாக உள்ள மனுதாரர்களை அங்கு நியமிப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்