கரூர் அருகே உள்ள ஒரு கோவிலில், எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்யும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை ஐகோர்ட் கிளை இந்த நிகழ்வுக்கு தடை விதித்துள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் அருகே உள்ள நெரூர் என்ற பகுதியில், சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமி நினைவு நாளை ஒட்டி எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இந்த கோவிலில் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி, பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்வது மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்வது, சுகாதாரத்திற்கும் மனித மாண்பிற்கும் பாதகமானது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கூறி, இந்த நிகழ்வுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.