தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்

செவ்வாய், 7 நவம்பர் 2017 (10:43 IST)
தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் சைதாப்பேட்ட்டையில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். 


 

 
ஜூலை 30ஆம் தேதி 1924ஆம் ஆண்டு கடலூர் சாத்துக்குடலில் பிறந்தார் தமிழ் பேராசிரியர் மா.நன்னன். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ்க் கட்டுரை மற்றும் பாட நூல்கள் உள்ளிட்ட சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் தமிழிசைக்கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். 
 
1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். எழுத்து அறிவித்தலில் நன்னன் முறை என்ற புதிய முறையை உருவாக்கியவர். பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளை பெற்றவர். 
 
தொலைக்காட்சிகளில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் மெட்ராஸ் பிரஸிடென்சி கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வந்தார். சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் 94 வயதில் காலமானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்