அரபிக்கடலில் மிதந்த உபேர் நிறுவன கார்: ஃபேஸ்புக் பயனாளியின் பரபரப்பு பதிவு

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:10 IST)
தனியார் வாடகை கேப் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான திகழ்ந்து வரும் உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகின்றது. அவற்றில் ஒன்று நாம் புக் செய்த கார் எந்த இடத்தில் உள்ளது, எப்போது நம் இடத்திற்கு வருகை தரும் என்பதை கூகுள் மேப் மூலம்  தெரிந்து கொள்ளலாம்
 
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி மும்பையை சேர்ந்த ஒருவர் உபேர் நி'றுவனத்தில் கேப் புக் செய்துவிட்டு, தனக்கு வரும் கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பை ஓப்பன் செய்துள்ளார். அதில், அவருக்கு வரவுள்ள கார் அரபிக்கடலில் இருப்பதாக காண்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்த அந்த நபர் உடனே அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார்
 
அவருடைய இந்த பதிவுக்கு பலவித கேலி, கிண்டலான கமெண்ட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. கூகுள் மேப் பெரும்பாலும் சரியான ரிசல்ட்டை கொடுத்தாலும் ஒருசில நேரத்தில் இதுபோன்ற காமெடி ரிசல்ட்டை கொடுத்து வருகிறது. இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கேப் நிறுவனத்தின் கார் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருப்பதாக இதே கூகுள் மேப் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்