நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:30 IST)
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்