இங்கிலாந்திலும் ஒலித்த ஜல்லிக்கட்டு ஆதரவு குரல்!

புதன், 18 ஜனவரி 2017 (15:39 IST)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் சாலையில் போராட்டம் நடத்தினர்.


 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவான போராட்டக் களம் உலகளவில் விரிவடைந்துள்ளது. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரக அலுவலகம் முன் திரண்ட இங்கிலாந்து வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போஸ்டர்களை கைகளில் ஏந்தி நின்ற தமிழர்கள், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்‌தனர்.

தமிழர்களின் பாரம்பரியம் அழிவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று கூறிய அவர்கள், இதற்காக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் குரல் கொடுப்போம் என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்