தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக அனைத்து கடைகளும் நேற்றும் இன்றும் திறந்திருக்கும் என்றும் அனைத்து பேருந்துகளும் 24 மணி நேரமும் இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதேபோல டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தது. இதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 100.43 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மண்டலத்தி்ல் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.